இழப்பு
நான் உன்னைக் கண்டுகொண்ட நாள்தான்
இப்படி விரிந்து கிடக்கிறதோ?
இந்த அமைதியை
யார் விரும்புகிறார்கள்?
குழந்தைகள் மட்டும்தான்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
பார்த்துக் களித்துக் கொண்டிருக்கும்
பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை.
இசை முதலாம் எல்லாக் கலைகளுமே
தோற்றுவிட்டன.
பெரும் புதையலைத் தனக்குள் கொண்டிருக்கும்
இந்த அமைதியை
அகழ்ந்து பார்க்கத் தெரியாத
அச்சமும் ஆர்வமின்மையாலும்தானே
அகலாது நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன
நம் துயர்களும் போர்களும்?
உயர் அடுக்கக இல்லக் கட்டடங்கள்
மலைகளாய் உயர்ந்துவிட்ட
தேன்கூடுகள்!
இனி தேனீக்கள் சிறகடித்தலையும்
மலர்வெளியாகத்தானே
இருக்க முடியும் இந்த பூமி?
புகைப்படம்: பானு
இதழ் 14 பிற படைப்புகள்
- இதழ் 14: அறிவியல் புனைவுக்கு அப்பால்
- நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்
- நேர்காணல்: மிஷ்கின்
- நேர்காணல்: செழியன்
- நேர்காணல்: விஸ்வாமித்திரன் சிவகுமார்
- ஹோட்டல் சுதந்திரம்
- டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 8
- அடாசு கவிதை – 14
- ஒரு நாள் கழிந்தது
- லிலி: தொடரோவியக் கதை – 12
- கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்
- அறிவிலுமேறி அறிதல் – 9: வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்
- திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா
- நீச்சல் குளம்: பகுதி 3