"சில துறவிகள் புரிகின்ற 'உயிர் நீத்தல்' சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு."
மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில்…
நிணமும் ரத்தமுமென நனைந்த மண்ணை அள்ளி அள்ளி அவள் செய்து வைத்திருந்த கல்லில் ஆவேசமாகக் கொட்டினாள். அந்தக் கல் ஆண்குறியை ஒத்திருந்தது. அதன் கீழே யோனியின் நுழைவாயில்…
குழந்தையோட வாழ்நாள் ஆரோக்கியத்துக்கான எல்லா பரிந்துரைகளுக்கும் டிரீட்மெண்ட் தேர்வுகளுக்கும் ஜீனோம்ல உள்ள ரெலவண்ட் இன்ஃபர்மேஷனையும் கன்ஸிடர் பண்ணனும்னு இந்தச் சட்டத்தோட முதல் ஷரத்து சொல்லுது.
கோவிட்-3 போன்ற கொடூரமான காலகட்டத்தில்தான் பொது ஜனம் அதுவரையில் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும்.
லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.
தற்கொலை என்பது ஒருவித பரம்பரைச் சொத்து, அதிலிருந்து தப்புவது மரபுக் குறியீட்டாக்கத்தின் கைகளில்தான் இருக்கிறது.
"சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.