தனது வாழ்நாளில் இந்தச் சுடுகாட்டின் தட்டகத்தில் எத்தனை அழுகை, ஆதாளி, ஒப்பாரி, நெஞ்சடிப்பு, கசிந்துருகல், புலம்பல், பிலாக்கணம், பொச்சரிப்பு, பொய் நடிப்பு, வெளிச்சோகம் – உட்காமம், கண்ணீர்,…
வெறுமனே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்கூட, கிட்டத்தட்ட என்னைத் தெருவில் இழுத்துவிட்டிருக்கிறான்; நானே முனைந்து மீள வேண்டியதாகிவிடும்.
பொம்மைகள் சொல்லும் கதைகளின் கடவுள்கள் அவதரிப்பதில்லை. அது மனிதக் கால்தடம் பதிந்திராத பூமிக்காடு.
அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.