தன்னுடைய முழு சாத்தியத்தையும் பயன்படுத்திக் கடவுளை நெருங்கிய மனிதன் இன்னும் மேலே செல்வதா வேண்டாமா என்று குழம்பி நிற்கிறான்.
மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன.
அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.