மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது.
மிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா..? இலக்குகள் இருக்கமுடியுமா..? நீர்வழிப் போவது அதன் விதி.
இந்த நாவல் ஒரு தனித்துவம்வாய்த்த பிரதியாக மாறுவது இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எத்தனையோ சமரசங்களைச் செய்து கொண்டும் வாழ்க்கையின் மீதான நேதேசத்தைக் கைவிடாத மனிதர்களைச் சித்தரிப்பதனால்தான்.
சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.