அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின் மூலமாகச் செய்யும்போது அவர் காலத்தின் குரலாக…
“தான் உண்பதற்காகப் பிற உயிர்களைக் கொழுக்க வைக்கிறான் மனிதன், உண்மையில், மண்புழுக்கள் உண்பதற்காகத் தன்னையே அவன் கொழுக்க வைக்கிறான்."
இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான்.
மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.
நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா?
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.
ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.