இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.
ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.
நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு…
இந்த அரூபத் தரிசனத்தைத் தேடும் ஒரு முயற்சி அண்மையில் இணையத்தில் உதித்துள்ளது. இத்தேடல் நனவுலகின் விளிம்பில் நின்றவண்ணம் கனவுலகிற்குள் துழாவும் ஒரு யத்தனமாகும்.
அரூ ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை இலக்கிய ஆர்வமுள்ள சில அறிவுஜீவி வாசகர்களுக்கு மட்டுமானது என்று உருவாகத் தொடங்கியிருக்கும் பிம்பத்தைத் தொடர்ந்து உடைத்துப் போட்டுக்கொண்டே வளரவேண்டும்.
உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது.
இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.
நகர்வின் அசைவில் சுமை அழுத்தம் குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக வால் பற்றித் தொடரும் களிறுகளாய் அசையத் தொடங்குகின்றன
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.