புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.
நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.
ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும்.
'காலம்' என்கிற கருப்பொருளைக் கொண்டு ஓவியர் எலிசா மஷ்ஹெலேன் உருவாக்கிய இரு வரைகதைகள்.
ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.