அறிவியல் புனைவின் அடிப்படை அம்சம், சுவாரசியம். எனவே அறிவியல் கதையின் மொழி வாளின் கூர்மை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் கற்பனாவெளியின் மேகத்திரள்களைக் கீறிக்கொண்டு போக வேண்டும்.
இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.
தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின்…
அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது.
பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக…
நோர்வீஜியன் வுட் நாவலின் முதல் அத்தியாயத்தை ஒளிரச் செய்தேன். டோருவாக நானும் நவோகாவாக அவளும்.
ஒரு மரணத்தை அதுவும் தற்கொலையை இத்தனை அருகில் பார்த்த போது என்னிடமிருந்த குரூரமெல்லாம் என்னை விட்டு அகன்றது.
அந்தக் கணம் நாங்கள் எதிர்பார்த்து வந்த பிளிறல் சத்தமும் இல்லை, குரலும் இல்லை. மழை பெய்து ஓய்ந்த கடைசிச் சொட்டின் நிசப்தம்.
வீட்டில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்களை உடனடியாக அழித்துவிட வேண்டும்.
தற்கொலை என்பது ஒருவித பரம்பரைச் சொத்து, அதிலிருந்து தப்புவது மரபுக் குறியீட்டாக்கத்தின் கைகளில்தான் இருக்கிறது.
உடலைப் பதப்படுத்துவது போல், மனதைப் பதப்படுத்துவதற்குக் கருவிகள் இல்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு உதித்தது.