அறிவிப்புகள்

28 மே 2023

அறிவியல் சிறுகதைப் போட்டி #4 முடிவுகள்


28 டிசம்பர் 2022

அறிவியல் சிறுகதைப் போட்டி #4


10 மே 2021

அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்


3 டிசம்பர் 2020

அறிவியல் சிறுகதைப் போட்டி 2021


8 ஏப்ரல் 2020

அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்


2 ஜனவரி 2020

அறிவியல் சிறுகதைப் போட்டி 2020


5 ஏப்ரல் 2019

அறிவியல் சிறுகதைப் போட்டி 2019 முடிவுகள்


30 ஜனவரி 2019

அறிவியல் சிறுகதைப் போட்டி

அரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெயமோகன் ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்துவதற்கான யோசனையை முன்வைத்தார். அதன்படி அரூவின் முதல் அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது.

இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000 [பத்தாயிரம்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும்.

போட்டியின் விதிமுறைகள்

  1. அறிவியல் சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும். கதைக்கருக்களின் விரிவாக்கம் அறிவியலின் பொதுவான ஊகநெறிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும்.
  2. நேர்காணலில் ஜெயமோகன் பல அறிவியல் கதைக்கருக்களைக் குறிப்பிடுகிறார். அந்தக் கதைக்கருக்களையே சுதந்திரமாக விரிவாக்கி கதைகளை எழுதலாம். அதைப்போன்ற புதிய கருக்களையும் கையாளலாம்.
  3. வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.
  4. போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தர வேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்படாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  5. மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  6. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்குபெறலாம். வயது வரம்பும் கிடையாது. ஒரே எழுத்தாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அனுப்பலாம்.
  7. எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும்போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.
  8. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியாகும். இந்தப் போட்டி தொடர்பான எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  9. “வரும் கதைகளில் சிறந்தது” என்று இல்லாமல், “உண்மையானஅறிபுனைவு” கதைகளே தேர்ந்தெடுக்கப்படும்.
  10. மார்ச் 10, 2019 ஆம் தேதிக்குள் aroomagazine@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சிறந்த கதை எவ்வாறு தேர்வு செய்யப்படும்?

சிறந்த கதைத் தேர்விற்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுபவை

  1. மேலோட்டமாகத் தொழில்நுட்பத்தை மட்டும் பேசாமல், கதை ஆழமான வாழ்க்கைக் கேள்விகளை நோக்கிச் செல்கிறதா?
  2. வியப்பு, பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், மனித இருப்பு, பிரபஞ்சத்துடனான உறவு, காலம், வெளி என அடிப்படைக் கேள்விகளை நோக்கிச் செல்கிறதா?

மேலும் புரிதலுக்கு…

“அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மனிதர்களின் எதிர்வினைகளை சொல்லும் இலக்கியத்தின் ஒரு கிளையே அறிவியல் புனைவு.” – Isaac Asimov

“அறிவியல் நிதர்சனத்துக்கும் தீர்க்கமான பார்வைக்குமான வனப்பான காதல் உறவே அறிவியல் புனைவு.” – Hugo Gernsback

“ஓர் இலட்சிய அறிவியல் சிறுகதையானது புனைவு வழியாக முன்வைக்கப்பட்ட ஓர் அறிவியல் ஊகம்.” – ஜெயமோகன்

“அறிவியல் புனைவு பேரண்டத்தில் மனிதனின் நிலையைப் பற்றி பேசுவது. அறிவியலைப் பற்றியோ, தொழில்நுட்பத்தைப் பற்றியோ அல்ல. நம் கலாச்சாரத்தையும் அறிவியலையும் இணைக்கும் பாலமே அறிவியல் புனைவு.” – Victor R Ocampo