சில மாற்றங்கள்:
பலரும் கேட்டுக்கொண்டதாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதையும் கருத்தில் கொண்டு, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021க்குச் சிறுகதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கனவே கதைகளை அனுப்பியவர்கள் விரும்பினால் அவர்களின் கதைகளை எடிட் செய்து அனுப்பலாம்.
2019, 2020 போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் போட்டியில் பங்குபெற இயலாது என்ற விதிமுறையிலும் மாற்றம் செய்யச் சொல்லிக் கோரிக்கைகள் வந்தன. அதன் மூலம் சிறந்த அறிவியல் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்குமே என்கிற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டு போட்டியின் விதிகளிலும் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டுகளில் பரிசு வென்ற எழுத்தாளர்களும் போட்டியில் பங்கு பெறலாம். அவர்களின் சிறுகதைகள் தேர்வாகும்பட்சத்தில், ஏப்ரல் மாத அரூ இதழில் பிரசுரிக்கப்படும். அரூ அறிவியல் சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெறும். ஆனால் பரிசுத்தொகை வழங்கப்பட மாட்டாது. இதுவரை பரிசு பெறாதவர்களுக்கே பரிசுத் தொகை கொடுக்கப்படும்.
இந்த மாற்றத்தின் நோக்கம் சிறந்த அறிவியல் சிறுகதைகள் வாசிக்கக் கிடைப்பதே.
எழுதுங்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன் (2019), சாரு நிவேதிதா (2020) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியின் நடுவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்.
போட்டிக்கு வரும் கதைகளிலிருந்து குறிப்பிடத்தகுந்த சில கதைகளை அரூ குழு தேர்வு செய்து எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு அனுப்பும். அவற்றிலிருந்து ஒரு பரிசுக்குரிய கதையை அவர் தேர்வு செய்வார். இன்னொரு பரிசுக்குரிய கதையை அரூ குழு தேர்வு செய்யும்.
அரூவின் ஏப்ரல் 2021 இதழில் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும். இக்கதைகள் புத்தக வடிவிலும் வெளியாகும்.
தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறுகதைகளுக்குப் பரிசுகளை வழங்குபவர்கள்:
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல நேர்ந்தால், அங்கு அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 மற்றும் 2020 ஆகிய இரு தொகுப்புகளும் எழுத்து பதிப்பக அரங்கில் கிடைக்கும். இணையம் வழியாகவும் வாங்கலாம். சுட்டிகள் இதோ:
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 – https://tinyurl.com/aroo2019
அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 – https://tinyurl.com/arootwenty