அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021

சில மாற்றங்கள்:

பலரும் கேட்டுக்கொண்டதாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதையும் கருத்தில் கொண்டு, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021க்குச் சிறுகதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கனவே கதைகளை அனுப்பியவர்கள் விரும்பினால் அவர்களின் கதைகளை எடிட் செய்து அனுப்பலாம்.

2019, 2020 போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் போட்டியில் பங்குபெற இயலாது என்ற விதிமுறையிலும் மாற்றம் செய்யச் சொல்லிக் கோரிக்கைகள் வந்தன. அதன் மூலம் சிறந்த அறிவியல் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்குமே என்கிற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டு போட்டியின் விதிகளிலும் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுகளில் பரிசு வென்ற எழுத்தாளர்களும் போட்டியில் பங்கு பெறலாம். அவர்களின் சிறுகதைகள் தேர்வாகும்பட்சத்தில், ஏப்ரல் மாத அரூ இதழில் பிரசுரிக்கப்படும். அரூ அறிவியல் சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெறும். ஆனால் பரிசுத்தொகை வழங்கப்பட மாட்டாது. இதுவரை பரிசு பெறாதவர்களுக்கே பரிசுத் தொகை கொடுக்கப்படும்.

இந்த மாற்றத்தின் நோக்கம் சிறந்த அறிவியல் சிறுகதைகள் வாசிக்கக் கிடைப்பதே.

எழுதுங்கள்!


கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும்.

போட்டியின் விதிமுறைகள்

  1. அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.
  2. வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.
  3. போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையதளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தர வேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்படாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  4. மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  5. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்குபெறலாம். வயது வரம்பும் கிடையாது. ஒருவர் இரண்டு சிறுகதைகள் மட்டுமே அனுப்பலாம். அதற்கு மேல் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  6. சென்ற ஆண்டுகளில் பரிசு வென்ற எழுத்தாளர்களைத் தவிர மற்ற அனைவரும் பங்கு பெறலாம் (சுசித்ரா, நகுல்வசன், ரா.கிரிதரன், ஆர். ராகவேந்திரன், தன்ராஜ் மணி, கவிஜி, கோ.கமலக்கண்ணன்).
  7. எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும்போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.
  8. பரிசுக்குரிய கதைகளை அரூ குழுவும் நடுவரும் பரிசீலித்துத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களின் தீர்ப்பே இறுதியாகும்.
  9. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளை அச்சு வடிவிலும் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பிக்கும் உரிமை அரூ இதழுக்கு உண்டு.
  10. கதைகளை 15 மார்ச் 2021 ஆம் தேதிக்குள் aroomagazine@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நடுவர்

எழுத்தாளர்கள் ஜெயமோகன் (2019), சாரு நிவேதிதா (2020) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியின் நடுவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்.

போட்டிக்கு வரும் கதைகளிலிருந்து குறிப்பிடத்தகுந்த சில கதைகளை அரூ குழு தேர்வு செய்து எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு அனுப்பும். அவற்றிலிருந்து ஒரு பரிசுக்குரிய கதையை அவர் தேர்வு செய்வார். இன்னொரு பரிசுக்குரிய கதையை அரூ குழு தேர்வு செய்யும்.

அரூவின் ஏப்ரல் 2021 இதழில் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும். இக்கதைகள் புத்தக வடிவிலும் வெளியாகும்.

பரிசுகளை வழங்குபவர்கள்

தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறுகதைகளுக்குப் பரிசுகளை வழங்குபவர்கள்:

அரூ அறிவியல் சிறுகதை தொகுப்புகள்

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல நேர்ந்தால், அங்கு அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 மற்றும் 2020 ஆகிய இரு தொகுப்புகளும் எழுத்து பதிப்பக அரங்கில் கிடைக்கும். இணையம் வழியாகவும் வாங்கலாம். சுட்டிகள் இதோ:

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 – https://tinyurl.com/aroo2019
அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 – https://tinyurl.com/arootwenty

மேலும் படிக்க

  1. அரூ அறிவியல் சிறுகதை போட்டி 2019இல் தேர்வான கதைகள்
  2. அரூ அறிவியல் சிறுகதை போட்டி 2020இல் தேர்வான கதைகள்
  3. 2019 போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வை
  4. 2020 போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைப் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பார்வை
  5. அரூவில் வெளியான அறிவியல் புனைவு சிறுகதைகள்
  6. “அரூ அறிவியல் சிறுகதை 2019” தொகுப்பிற்கு சுனில் கிருஷ்ணன் எழுதிய முன்னுரை
  7. அறிவியல் புனைவு: எழுத்தாளர் தொகுப்பாளர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் நேர்காணல் – பாகம் 1 | பாகம் 2
  8. அறிவியல் புனைவு: எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல்
  9. எழுத்தாளர் சாரு நிவேதிதா நேர்காணல்