ஈறிலி

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக இருக்க விடுவதில்லை. சில வேளைகளில் பெண்ணுக்குரியதையும் செய்ய வைக்கிறாய்.

மின்னு

மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல.

வெற்றுக் கணங்கள்

மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?