லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.
இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.
ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன.
அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது.
பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக…
நோர்வீஜியன் வுட் நாவலின் முதல் அத்தியாயத்தை ஒளிரச் செய்தேன். டோருவாக நானும் நவோகாவாக அவளும்.
ஒரு மரணத்தை அதுவும் தற்கொலையை இத்தனை அருகில் பார்த்த போது என்னிடமிருந்த குரூரமெல்லாம் என்னை விட்டு அகன்றது.