வெறுமனே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்கூட, கிட்டத்தட்ட என்னைத் தெருவில் இழுத்துவிட்டிருக்கிறான்; நானே முனைந்து மீள வேண்டியதாகிவிடும்.
வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.
பொம்மைகள் சொல்லும் கதைகளின் கடவுள்கள் அவதரிப்பதில்லை. அது மனிதக் கால்தடம் பதிந்திராத பூமிக்காடு.
அவளுக்கு ரத்தமும் சதையும் உள்ள, நரம்புகளும் ரத்த நாளங்களும் ஓடும் உணர்வுள்ள கைகள் தேவை.
இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.