இறுதி யாத்திரை

காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப் படியவிட்டுச் செல்கிறது. அந்தக்களிம்பை என் கிழங்கிலிருந்து சீவி மழித்தெடுக்க ஒரு சவரக்கத்திக்கூடவா இல்லை, இப்பிரபஞ்சத்தில்?

என்றூழ்

நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்…” என்றது.

கார்தூஸியர்களின் பச்சை மது

மடாலயத் தலைமைத் துறவியைத் தவிர அங்கிருந்த துறவிகளுக்கு யார் அந்த பானத்தைப் பருகியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அங்கிருந்த யாவருக்கும் பெருவாழ்வின் ஒரு துளியையாவது ருசித்துவிட வேண்டுமென்ற ரகசிய ஆசை இருந்தது.

சொல்லாழி வெண்சங்கே

ஒன்றிலிருந்து ஒன்று வெடித்து உண்டான இவ்வெளியில் உன்னிலிருந்து உன்னைப் படைக்கும் நீயே சக்தி. நீ கொண்ட தசைவடிவம் வலிமை பெறட்டும். படைப்புக்கென நீ கொண்ட மென்மையைப் பட்டின்நூலென அறுந்திடாத சரடாக்கு.

நோய் முதல் நாடி

குழந்தையோட வாழ்நாள் ஆரோக்கியத்துக்கான எல்லா பரிந்துரைகளுக்கும் டிரீட்மெண்ட் தேர்வுகளுக்கும் ஜீனோம்ல உள்ள ரெலவண்ட் இன்ஃபர்மேஷனையும் கன்ஸிடர் பண்ணனும்னு இந்தச் சட்டத்தோட முதல் ஷரத்து சொல்லுது.

பூர்ணகும்பம்

அவள் உடல் அதில் இருக்கிறதென்றால் நான் யாருக்குக் கணவன்? இல்லை, இனிமேல் நான் கணவன் இல்லை. மாதவி இல்லை. அவள் உடல் இதில் இருக்கிறது. உடல் இல்லாமல் நான் கணவனாக இருக்க முடியாதா என்ன? அப்படியென்றால் உடலுக்குத்தான் நான் கணவனா?

சக்கர வியூகம்

அங்கு நிற்கும் அவன் செத்து வீழ்ந்து சில நாள்களில் அவன் பெயர் தெரிய வரும்போது மண்டியிட்டு இறைவனிடன் இவனுடைய பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிற சிந்தனை சட்டென தர்மாவின் மனத்தில் தோன்றியதும் துப்பாக்கியைக் கீழறக்கி வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பகுதாரி

நீ சில ஸ்வரங்களோட ஒரு பாட்டைப் பாடினா அதே ராகத்தை அடித்தளமா எடுத்துக்கிட்டு அந்த ராகத்தோட பிரயோகத்துல சில மாற்றங்களைச் செய்து அந்த சாப்ட்வேர் திரும்பப் பாடும்.

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.