உடலைப் பதப்படுத்துவது போல், மனதைப் பதப்படுத்துவதற்குக் கருவிகள் இல்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு உதித்தது.
நான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது.
மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?
அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.
நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.
எரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார்.