பூமியில ஒரு மீன் விக்கிற காசுல வானத்துல ஒரு குடும்பம் பறந்துகிட்டுச் சாப்பிடலாம். நீயும் வானத்தைத்தான வித்துகிட்டுருக்க?
லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.
இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.
நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.
ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன.