இப்படி எத்தனையோ கற்பனைக் கற்களை வான் நோக்கி விட்டெறியலாம்தான். ஆனால் எந்தக் கல்லை வானே கொண்டுவிடும்? மொத்தமும் நம்மீதே அல்லவா விழுந்துவிடும்.
மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.
நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து…
காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப்…