கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.
Category: கட்டுரை
மகத்தான சல்லிப்பயல்கள்
கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி படிந்த சுவடுகளைப் பதிவு செய்கிறது ஆலன் மூரின் வாட்ச்மென்.
‘இச்சி த கில்லர்’ (2001) – பின்நவீன அரசியலில் தனித்திருக்கும் கலைஞன்
ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும் பதியப்பட்ட வரலாற்றின் மீதான விமர்சனங்களின் உதவிகொண்டு, சௌகரியமாக இருட்டடிப்பு செய்துவிடுகின்றனர்.
கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…
நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது இப்பூமி.
அறிவிலுமேறி அறிதல் – 5: கவிதை நிகழும் வெளி
தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து ‘அதுமாத்ரமாதல்’ நிகழ்கிறது.
திரைகடலுக்கு அப்பால் 1: குற்றமும் தண்டனையும் – தகர்க்க முடியாத தடைகள்
ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.
கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்
நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர்.
அறிவிலுமேறி அறிதல் – 4: நெகிழும் காலம்
இந்தத் தான் தானேயாகி நிற்கும் வெளியில் கவித்தரிசனத்தை, ஆன்மீக தரிசனத்தை அடைகிறோம்.
‘மிரர் (1975)’ – உடைபடும் தார்க்கோவ்ஸ்கிய பிம்பங்கள்
இடம், பின்னணி இசை/கவிதை, நேரம், ஒளிப்பதிவு — ஒன்றோடொன்று கொண்டிருக்கும் உறவும், அவையனைத்தும் சுயம்புவாக நிற்காமல், அவற்றை நாயகருக்குத் தோன்றும் இயல்பான ஆழ்மன உணர்வுகளின் கீழ் வைப்பதுமே தார்க்கோவ்ஸ்கியின் கவித்துவத் தர்க்கத்தை முழுமைப்படுத்துகின்றது.
கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா
மெக்கா மதினா செல்வது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வது போன்றது சாருவுக்கு மற்ற கலைஞர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது.
ஜான் பால் சாரு
தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா உள்ளிட்ட தளங்களில் நிகழ்ந்துவிட்ட தரவீழ்ச்சியோடு தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருப்பவர்.
நீளும் எல்லைகள் – 3: முரண்களை விவாதித்தல் – டெட் சியாங்கின் கதைகள்
தன்னுடைய முழு சாத்தியத்தையும் பயன்படுத்திக் கடவுளை நெருங்கிய மனிதன் இன்னும் மேலே செல்வதா வேண்டாமா என்று குழம்பி நிற்கிறான்.
சங்க இலக்கியமும் நீல் ஹார்பிஸனும்
நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.
கடவுளுடன் ஒரு சுற்றுலா
அறிவியல் புனைவின் அடிப்படை அம்சம், சுவாரசியம். எனவே அறிவியல் கதையின் மொழி வாளின் கூர்மை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் கற்பனாவெளியின் மேகத்திரள்களைக் கீறிக்கொண்டு போக வேண்டும்.
கண்டடைதலின் பேருவகை
மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய / தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.
கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்
கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா?
அறிவிலுமேறி அறிதல் – 3: தன்னைத் தான் அருந்துதல்
எந்த மெய்யனுபவமும் சொல்லில் (கலையில்) வெளிப்பட்ட பின் அது உயிர்தன்மையை இழந்துவிடுகிறது.
முள்ளம்பன்றிகளின் விடுதி: இரு பார்வைகள்
நாம் வாழும் யதார்த்தத்தில் இருந்து, வருங்காலத்தைப் பற்றிய கண நேர கண்ணோட்டத்தை அளிப்பதுதான் அறிவியல் புனைவுகளின் சிறப்பம்சம். இத்தொகுப்பில் முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் அத்தகையதொரு வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.