காணவும் அறியவும் தெரியவும் வேட்கைஆற்றல் உள்ளவனுக்கு ஒரு கவிதையே போதும் என்கிறது கவிதையின் மதம்.
மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.
நாம் நம் எண்ணங்கள் எனும் மனித விரல்களால் பற்ற முடியாத இவற்றை நம் பார்வையால் பற்ற இயலும் அப்புறம் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதெதுவுமே இருக்காது.
மெய்த்தேடலில் அலைக்கழிப்பில் ஒருவர் தேடலைப் பற்றிக்கொள்வதும், ஒருவரைத் தேடல் பற்றிக்கொள்வதும் நிகழக்கூடியது.
நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா?
'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்.
அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்.
வாழ்வின் நடனத்தை - கவிதையின் நடனத்தை – நாம் கண்டுகொண்டோமா என்பதுவே நமது மிகப்பெரிய கேள்வி.
கவிஞர்களில் உருவகங்களின் (metaphor) உருவாக்கம் மற்றும் நிலைபெறுதலில் புலன்சேர்க்கைத் தன்மையின் பங்கு இருக்கலாம் என ஊகிக்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன்.