காணவும் அறியவும் தெரியவும் வேட்கைஆற்றல் உள்ளவனுக்கு ஒரு கவிதையே போதும் என்கிறது கவிதையின் மதம்.
Category: கட்டுரை
திரைகடலுக்கு அப்பால் 4: புத்துயிர்ப்பு
மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.
கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்
நாம் நம் எண்ணங்கள் எனும் மனித விரல்களால் பற்ற முடியாத இவற்றை நம் பார்வையால் பற்ற இயலும் அப்புறம் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதெதுவுமே இருக்காது.
அறிவிலுமேறி அறிதல் – 8: இதுவுமல்ல அதுவுமல்ல
மெய்த்தேடலில் அலைக்கழிப்பில் ஒருவர் தேடலைப் பற்றிக்கொள்வதும், ஒருவரைத் தேடல் பற்றிக்கொள்வதும் நிகழக்கூடியது.
திரைகடலுக்கு அப்பால் 3: மலரும் மன்னிப்பும்
நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா?
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்
போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 94!
புனைவின் அறிவியல் பற்றி…
‘அறிவியல் புனைவு’ என்பது, ‘நிஜப் பொய்’ என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்.
அறிவுப் பாதை முடிவும், புனைவுப் பயணத் தொடக்கமும்…
அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்.
கவிதையின் மதம் – 7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்
வாழ்வின் நடனத்தை – கவிதையின் நடனத்தை – நாம் கண்டுகொண்டோமா என்பதுவே நமது மிகப்பெரிய கேள்வி.
அறிவிலுமேறி அறிதல் – 7: புலன்சேர்க்கைத் தன்மையும் கலையும்
கவிஞர்களில் உருவகங்களின் (metaphor) உருவாக்கம் மற்றும் நிலைபெறுதலில் புலன்சேர்க்கைத் தன்மையின் பங்கு இருக்கலாம் என ஊகிக்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன்.
சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்
இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து இறுதிவரை வருகிறது.
எனது எழுத்தாளர்
துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், ‘துணையெழுத்து’, ‘எஸ்.ராமகிருஷ்ணன்’, ‘நீரில் மிதக்கும் நினைவுகள்’ போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன்.
எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்
வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது கட்டுரைகள் மூலம் அதற்கான பயிற்சியை நமக்குக் கொடுக்கிறார்.
எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்
கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து உடனே எஸ்ரா கூறும் உலகிற்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற விழைவை ஏற்படுத்திவிடுகிறார்.
எஸ்.ரா – என் அறிவுலக ஜன்னல்
எஸ். ராவின் காலடிச் சுவடுகளை பின்பற்றி சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ என பாதைதோரும் பரவசம் நம்மை தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.
தமிழின் பெருமை எஸ்.ரா.
எழுத்தாளன் என்றால் ஏழை, தோல்வியடைந்தவன், உதவி கோருபவன் என்ற அவச்சொற்களை அழித்தவர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.
காலம் – நம்மை ஆர்க்குங் கயிறு
புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.
காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது
நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.