நான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது.
யவனிகா ஸ்ரீராம்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர். இயற்பெயர் இளங்கோவன். தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும் ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன.
கவிதைத் தொகுப்புகள்:
இரவு என்பது உறங்க அல்ல
கடவுளின் நிறுவனம்
சொற்கள் உறங்கும் நூலகம்
திருடர்களின் சந்தை
காலத்தில் வராதவன்
தலைமறைவு காலம்
அலெக்ஸாண்டரின் காலனி
கட்டுரைத் தொகுப்பு: சந்தையில் விற்க ஒருபொருளும் இல்லை
விருதுகள்:
பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது
விருதாச்சலம் களம்புதிது விருது
நெய்வேலி லிக்னைட் வழங்கிய சிறந்த படைப்பாளர் விருது
ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது
இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை எனலாம்.
மானுட உடலின் மறைந்தொழிந்த புலன்களின் ஞாபகப் பாதையே பிதிரா
நத்தையின் உணர் கொம்புகளைப் பெற்று நீளும் புலன் வாசனை கூடிய வாசகனுக்கு அவனது உடலின் ஈர நகர்வையும் அறிதலின் புதிர்ப் பாதையையும் பச்சையத்தோடு புகட்டுவதாகவும், நாவல் தோன்றி குறுகி விரிகிறது.