நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.
விஜய ராவணன்
சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். சமீப காலமாகச் சிற்றிதழ்களில் சிறுகதைகள் தொடர்ந்து எழுதி வருகிறேன். கடந்த வருடம் கணையாழியில் வெளிவந்த என் 'காகிதக் கப்பல்' கதை இலக்கியச் சிந்தனையின் நவம்பர் மாதத்தின் தேர்வாக அமைந்தது. 2018-ஆம் ஆண்டு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது கிடைத்தது.
அநாமதேய சயனம்
அம்மாவுக்கு தினமும் இதே வேலைதான். எல்லையில்லா சயனத்தின் போதையை அதன் ஆழத்தை முழுதாய் அடையும் முன்னே கலைப்பது.