மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.
மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய / தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.