இறுதி யாத்திரை

காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப் படியவிட்டுச் செல்கிறது. அந்தக்களிம்பை என் கிழங்கிலிருந்து சீவி மழித்தெடுக்க ஒரு சவரக்கத்திக்கூடவா இல்லை, இப்பிரபஞ்சத்தில்?

பூர்ணகும்பம்

அவள் உடல் அதில் இருக்கிறதென்றால் நான் யாருக்குக் கணவன்? இல்லை, இனிமேல் நான் கணவன் இல்லை. மாதவி இல்லை. அவள் உடல் இதில் இருக்கிறது. உடல் இல்லாமல் நான் கணவனாக இருக்க முடியாதா என்ன? அப்படியென்றால் உடலுக்குத்தான் நான் கணவனா?

யாமத்தும் யானே உளேன்

சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான்.