சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.
சுபா செந்தில்குமார்
ஐந்து ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வரும் இவர் சிங்கையில் இலக்கியம் சார்ந்த தமிழ் அமைப்புகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு தேசிய கலை மன்றம் நடத்திய தங்க முனை போட்டியில் கலந்து கொண்டு கவிதைக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார்.
சிங்கையில் தி சிராங்கூன் டைம்ஸ் மற்றும் புதிய நிலா இதழிலும், தமிழகத்தில் வெளிவரும் ஆனந்த விகடன், குங்குமம், இனிய நந்தவனம், உயிர் எழுத்து இதழ்கள், குறிஞ்சி மின்னிதழ் மற்றும் காற்றுவெளி கலை இலக்கிய இதழிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
தான் சந்தித்த சமகால மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த புரிதல்கள், அவைசார்ந்த நுண்ணுணர்வுகள் போன்றவற்றைக் கவிதைகளில் தொடர்ந்து பதிவுசெய்வதை இவர் விரும்புகிறார்.