சத்யானந்தன்
தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய (தேனீ) மேடை விருதுகள் 2019-இல் பாரதிதாசன் நினைவு-மூத்த படைப்பாளர் விருதைப் பெற்றுள்ள கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி) இருபத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகத் எழுதி வருகிறார். சத்யானந்தன் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய Shoulders என்ற சிறுகதை HydRaWவின் 2020 ஆண்டுத்தொகுப்பிற்குத் தேர்வாகிச் சேர்க்கப்பட்டது. நவீனப் புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைக்கும் இவரது 'தப்பு தான்' சிறுகதை போடி மாலன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2019-இல் இரண்டாம் பரிசை வென்றது. 2019-இல் வெளியான காலச்சுவடின் 'தாடங்கம்' சிறுகதைத் தொகுதி உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் புதிய தடங்களைக் கண்டதற்காக கவனம் பெற்றுக் காலச்சுவடின் வெளியீடான 'தாடங்கம்' சரவணன் மாணிக்கவாசகத்தின் நூறு நூல்களுள் இடம் பெற்றுள்ளது. புது பஸ்டாண்ட் நாவல் 2020ன் கவித்துவமும் நவீனத்துவமான வடிவத்துக்கான நாவலாகக் கவனம் பெற்றது. இவரது 'சிறகுகளின் சொற்கள்' சிறுகதையின் ஆங்கில வடிவம் உலகளாவியத் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பான Unwinding-இல் சேர்க்கப்பட்டது.