மிதவைகளுக்கு லட்சியங்கள் இருக்க முடியுமா..? இலக்குகள் இருக்கமுடியுமா..? நீர்வழிப் போவது அதன் விதி.
சாம்ராஜ்
சாம்ராஜ் - கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்.
'என்று தானே சொன்னார்கள்' - கவிதை தொகுப்பு - 2012 சந்தியா பதிப்பகம், 'பட்டாளத்து வீடு' - சிறுகதை தொகுப்பு - 2015 - சந்தியா பதிப்பகம், 'நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்' - மலையாள சினிமா குறித்தான கட்டுரை தொகுப்பு - 2016 நற்றினை பதிப்பகம், 'ஜார் ஒழிக' - சிறுகதை தொகுப்பு - 2019 - நற்றினை பதிப்பகம்.
கவிதைதொகுப்பிற்கு 2013க்கான ராஜ மார்தாண்டன் விருது. சொந்த ஊர் மதுரை, தற்சமயம் சென்னை. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குனராக தங்க மீன்கள், பேரண்பு, மலையாள திரைப்படம் ஒழி முறி. திருடன் மனியன் பிள்ளையை திரைப்படம் எடுக்கும் முயற்சியில்.