ராம்பிரசாத்

நாவலாசிரியர் ராம்பிரசாத் (1981), கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கணிணி மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவுகள் எழுதி வருகிறார். தமிழ் இலக்கிய உலகில் கணிதப்புனைவுகள், அறிவியல் புனைவுகளுக்காக அறியப்படுபவர். 2009லிருந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், தேவியின் கண்மணி, ராணி, ராணி முத்து, கல்கி போன்ற வெகு ஜன இதழ்களிலும், உயிர்மை, கணையாழி, வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி போன்ற இலக்கிய இதழ்களிலும், Boston Literary Magazine, Readomania, Literary Yard, Quail Bell Magazine, Madswirl முதலான ஆங்கில இணைய இதழ்களில் நேரடி ஆங்கிலத்திலும் தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இக்குறிப்பு எழுதப்பட்ட மே 2023 வரையிலான தகவல்களின் படி, இவர் இதுகாறும் எழுதியிருக்கும் 13 நூல்களில், 4 ஆங்கில நூல்கள்; 'வாவ் சிக்னல்' - குறிப்பிடத்தகுந்த அறிவியல் புனைவுச் சிறுகதைத் தொகுதி. '220284 - குறிப்பிடத்தகுந்த கணிதப்புனைவு. அமெரிக்க அறிவியல் புனைவிதழான Aphelion science fiction and fantasy zineன் April 2023ம் இதழில் இவரது ஆங்கில அறிவியல் புனைவுச் சிறுகதை வெளியாகியிருக்கிறது, இவரது 'சோஃபியா' சிறுகதை 2022ம் ஆண்டுக்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறது, இவரது 'தழுவுக் கருவி' சிறுகதை 2023ம் ஆண்டுக்கான அரூ அறிவியல் புனைவிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வாகியிருக்கிறது, 2022ம் ஆண்டு இவர் பொறியியல் பயின்ற ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி இவரது இலக்கியப் பணிகளை கருத்தில் கொண்டு 'Distinguished Alumni Award' விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. தொடர்புக்கு: மின்னஞ்சல்: ramprasath.ram@gmail.com https://ramprasathkavithaigal.blogspot.com

தழுவுக் கருவி

மனிதர்கள் நகர்வதில்லை. அவர்கள் இழுக்கப்படுகிறார்கள்.

2 years ago