பூச்சியத்திற்கும் ஒன்றுக்கும் இடையில் இருக்கும் கோடான கோடி சாத்தியக் கூறுகளில் சறுக்கி விழுந்தவன் எழமுடியுமா என்ன?
ஆர்.ராகவேந்திரன்
நான் கோவையைச் சேர்ந்தவன். ஒரு பொதுத் துறை வங்கியில் பணி. வயது 43. மாணவப் பருவத்தில் கலைக்கதிர், தி ஹிந்து (அறிவியல் – தொழில்நுட்ப இணைப்பு), Science Reporter போன்ற அறிவியல் பத்திரிகைகளில் ஆர்வம். க.மணி அவர்களின் அறிவியல் கட்டுரைகள் திறப்பு தந்தன. சுவாமி ரங்கநாதானந்தா அவர்களின் (நரம்பியலும் அதற்கு அப்பாலும்) படைப்புகள் ஊக்கமளித்தன. அறிவியலை ஜனநாயகப்படுத்தும் எழுத்துகள் பிடிக்கும்.
ஜெயமோகன் அவர்களின் எழுத்துலகில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நுழைந்தேன். ஆசிரியராக வரித்துக்கொண்டு அவருடன் பயணிக்க முயல்கிறேன். வாசிக்கும்போதே மொழியும் நுட்பமும் நாம் அறியாமல் கற்றுக் கொடுக்கிறார். கோவை நண்பர் தியாகு (நூல்நிலையம்) அவர்கள் வாசிப்புக்கு ஊக்கமளித்து வருகிறார். 'சொல்முகம்' வாசிப்புக் கூடுகை நண்பர்கள் களியாட்ட மனநிலையில் வாசிப்பை மேற்கொள்ள உதவுகிறார்கள். தொடர்ந்து கற்றலை மேற்கொள்ள விழைகிறேன்.
திரும்பிச் செல்லும் நதி
மேகத்தில் அரசாணையை எழுதுவது, ஒரு சிறு கோள் அளவிற்கு கட் அவுட் வைத்துக்கொள்வது, பழங்காலக் கடவுள் படங்களைப் போலத் தனக்குத் தானே ஒளிவட்டம் மாட்டிக்கொள்வது என்று ஆரம்பித்துவிட்டானுகள்.
அடையாளம்
செல்லே, மெதுவாகப் பிரி;
அடி வயிற்றின் அக்னியே, குறைவாய் எரி; நிறைய நாள் சுடு
என் அருமைக் குரோமோசோமே, அணு அணுவாக நின்று மெதுவாகத் தேய்க