ரஃபீக் இஸ்மாயில்
வசந்தபாலனின் உதவி இயக்குநர். தற்போது சினிமா இயக்குவதற்கான முயற்சிகளுடன் காத்திருக்கிறார். திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சினிமாவுடன் இருபது வருடங்களாக உறவு, பன்னிரெண்டு வருடங்களாக நேரடியான பயிற்சி என சினிமாவை நேசித்து சினிமாவுடன் உழலும் சினிமா உயிரி இவர். இலக்கிய எழுத்தும், திரைக்கதை எழுத்தும் முற்றிலும் எதிரெதிரான அணுகுமுறை கொண்டது என்பது இவரது அனுபவத்தில் விளைந்த கருத்து. அதன் காரணமாகவே திரைக்கதை வடிவம் சரளப்படும் வரை இலக்கிய எழுத்தை முயற்சிக்காமல் இருந்து வந்தார். இப்போது முதன் முறையாக முயற்சித்திருக்கிறார். 'முன்னத்தி'க்குள் திரைக்கதை வடிவம் இடையூடுவதை உணர்கிறார். தொடர்ந்து எழுதுவதின் வழியே மெல்ல மெல்ல அந்த இடையூடு விலகி முழுமையான சிறுகதை வடிவத்தை அடைய விழைகிறார்.