ஆத்தா என்பது அவருடைய மெய்நிகர் உதவி செயலியின் பெயர். குரலையும் அவரது ஆத்தாவின் குரல் போலவே அமைத்துக்கொண்டார்.
பிரபாகரன் சண்முகநாதன்
இளங்கலை வணிகவியல் பட்டதாரி. பிறப்பு 1999. சொந்த ஊர் நாட்டரசன் கோட்டை, சிவகங்கை மாவட்டம். இலக்கியத்தின் மீதான ஆர்வம் வாசிப்பின் வாயிலாக உருவாகியது. அப்பாவின் புத்தகங்கள் வீடெல்லாம் இறைந்து கிடக்கப் பள்ளிப் பருவத்தில் அவைதான் விளையாட்டுத் தோழர்களாயின. விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக ஓராண்டு பணியாற்றி இருக்கிறார். கவிதைகள் எழுதுவார். நக்கீரன் கவிதைப் போட்டியில் இவருடைய கவிதை முதல் பரிசைப் பெற்றது. Pen to Publishக்காகக் கவிதைத் தொகுப்பு கிண்டில் பதிப்பில் வெளியிட்டார். போட்டிக் காலம் முடிவடைந்தவுடன் அன்பப்ளிஷ் செய்தும்விட்டார். எழுத்தினை நேசிப்பதால் அதனை எழுதிப் பார்க்க முயற்சி செய்கிறார்.
ஒளிந்திருக்கும் வானம்
நோர்வீஜியன் வுட் நாவலின் முதல் அத்தியாயத்தை ஒளிரச் செய்தேன். டோருவாக நானும் நவோகாவாக அவளும்.