இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.
பச்சமுத்து தில்லைக்கண்ணு
"திருவள்ளுவர் தொடங்கி நாளைக்கு எழுதப்போகிற இளைஞர் வரை அனைவரது உருவத்தையும் வரைய வேண்டும் என்பதுதான் எனது அடங்காத ஆசை," என்று சொல்லும் பச்சமுத்து, குடந்தை ஓவியக் கல்லூரியில் ஓவியர் சந்துருவிடம் படித்தவர். 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரில் இடம்பெற்ற 'கால்டுவெல் முதல் கலைஞர் வரை' எனும் கருப்பொருளில் 100 தமிழறிஞர்களின் உருவ ஓவியங்களை வரைந்திருக்கிறார்.