நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து மோதின.
முரளிதரன்
முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். மின்னணு மற்றும் கருவி மயமாக்கலில் இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்திலும் மானுடவியலிலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். முழு நேரமாக, மின்வழிக் கற்றல் துறையில் பாடங்களை வடிவமைத்துக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவுகள் எழுதுவதோடு மொழிப்பெயர்ப்பும் செய்து வருகிறார். நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் துணையுரைகள் (subtitles) எழுதியுள்ளார். 'அரூ அறிவியல் சிறுகதைகள் 2020' தொகுப்பில் இவர் எழுதிய 'மின்னு' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
மின்னு
மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல.