டைனோசர்

நினைத்ததைச்செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கை தான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

தூமை

‘நமக்கே நமக்குக் கருப்பை’, ‘நான் வயிற்றில் சுமந்த பிள்ளை’ – இந்த உணர்வு மயிரு மண்ணாங்கட்டி கதையெல்லாம் ஆண்கள் செய்யும் தந்திரம்.

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

ஈறிலி

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.