இந்த அரூபத் தரிசனத்தைத் தேடும் ஒரு முயற்சி அண்மையில் இணையத்தில் உதித்துள்ளது. இத்தேடல் நனவுலகின் விளிம்பில் நின்றவண்ணம் கனவுலகிற்குள் துழாவும் ஒரு யத்தனமாகும்.
இராம கண்ணபிரான்
ஓய்வுபெற்ற ஆசிரியரான இராம. கண்ணபிரான் 1943ஆம் ஆண்டில் பிறந்தவர். தம் பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிய இவர், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என மூவகை இலக்கியங்களையும் தொடர்ந்து படைத்துவருகிறார். தாய்லாந்தின் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருதும் (1990), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் ‘மாண்ட் பிளாங்க்’ இலக்கிய விருதும் (1997), சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றத்தின் இலக்கியத்திற்கான கலாச்சாரப் பதக்கமும் (1998) பெற்றுள்ளார்.