கமலதேவி

சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி மாவட்டம் பா.மேட்டூரில் பெற்றோருடன் வசிக்கிறார். இணைய இதழ்களில் கதைகள் மற்றும் வாசிப்பனுபவக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். சக்யை, குருதியுறவு, கடுவழித்துணை என்ற மூன்று சிறுகதைத்தொகுப்புகள் வாசகசாலை பதிப்புகளாக வெளிவந்துள்ளன. 2016 டிசம்பரில் இவரின் முதல் கதை ‘விடாய்’ சொல்வனத்தில் பிரசுரமாகியது. 2019 ஜனவரியில் இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பான ‘சக்யை’ வெளிவந்தது. ‘சொல்லாழி வெண்சங்கே’ என்ற கதை இவர் முதன்முதலாக எழுதிப்பார்த்த அறிவியல் புனைவு. "என் சூழலில் வாய்த்தற்கரிய வாசிப்பு மற்றும் எழுத்தை, உடல் மனம் பொருளாதாரம் மற்றும் ஊழின் எல்லைகளுக்குட்பட்ட இந்தச் சிறுவாழ்வின் சுழலில் முடிந்தவரைத் தொலைத்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன், மானசீகமாக நம் முன்னோடிகளின் கரங்களைப் பற்றிக்கொண்டு நடக்கிறேன்."

சொல்லாழி வெண்சங்கே

ஒன்றிலிருந்து ஒன்று வெடித்து உண்டான இவ்வெளியில் உன்னிலிருந்து உன்னைப் படைக்கும் நீயே சக்தி. நீ கொண்ட தசைவடிவம் வலிமை பெறட்டும். படைப்புக்கென நீ கொண்ட மென்மையைப் பட்டின்நூலென…

4 years ago