ஜெயந்தி சங்கர்
2015 முதல் தீவிரமாக ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியுள்ள ஜெயந்தி சங்கர் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் முக்கிய எழுத்தாளர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு வருகிறார். ஆங்கிலத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார். இவரது முதல் ஆங்கில நாவல் உருவாகி வருகிறது. சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார். நல்லி திசை எட்டும் விருது, திருப்பூர் அரிமா சக்தி விருது, ஆனந்தவிகடன் விருது 2016 உள்ளிட்ட எண்ணற்ற முக்கியப் பரிசுகளும் வாங்கியுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் கண்டு வருகின்றன. 34க்கும் அதிகமான இவரது ஒவ்வொரு தமிழ் நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்திரிகைத் துறையில் மூன்றாண்டு அனுபவம் பெற்றவர். பதினாறு ஆண்டுகளாக வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து freelance பணிகள் செய்து வரும் இவர் கடந்த ஈராண்டுகளாக சொந்தமாக ஓவியம் பயின்று வருகிறார். இவரது முதல் முழுநாள் ஓவியக் கண்காட்சி சில நூறு ஓவியங்களுடன் 22 செப்டம்பர் 2018 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.