கணேஷ் பாபு

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, தனக்கே உரிய பாணியில், மொழியின் பல்வேறு அடுக்குகளுக்குள் புகுந்து பார்க்க எத்தனிக்கும் புதுப் படைப்பாளி. பின்மதியங்களில் தூங்கி வழியும் தெருவினில் விளையாடும் சிறுவர்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகளின் வழியே இளவெயிலை வீட்டுக்குள் பாய்ச்சுவது போல, மொழியின் வெளிச்சத்தால் வாழ்வை ஆராய்வதே தன்னுடைய கதைகளின் நோக்கம் என்று நம்புகிறார். வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை மொழியின் பல்வேறு சாத்தியங்களால் அள்ளி எடுப்பதே எழுதுபவனின் சவால் என்று சொல்லும் இவர், தன்னுடைய எழுத்து வழிகாட்டிகளாக எஸ்.ராமகிருஷ்ணனையும், ஜெயமோகனையும் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனால் சிறந்த சிறுகதைகளாக சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின் மூலமாகச் செய்யும்போது அவர் காலத்தின் குரலாக…

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 6: ஹேம்லெட் – பாவமும் பழியும்

“தான் உண்பதற்காகப் பிற உயிர்களைக் கொழுக்க வைக்கிறான் மனிதன், உண்மையில், மண்புழுக்கள் உண்பதற்காகத் தன்னையே அவன் கொழுக்க வைக்கிறான்."

2 years ago

திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா

இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான்.

3 years ago

நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்.

3 years ago

திரைகடலுக்கு அப்பால் 4: புத்துயிர்ப்பு

மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.

3 years ago

திரைகடலுக்கு அப்பால் 3: மலரும் மன்னிப்பும்

நம்பிக்கையும், மன்னிக்கத் தயாராய் இருக்கும் உள்ளமும் உடைய மனிதன் தெய்வத்தின் ஒரு சிறுதுளி அல்லவா?

3 years ago

நேர்காணல்: எஸ்.ராமகிருஷ்ணன்

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை…

4 years ago

எனது எழுத்தாளர்

துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், 'துணையெழுத்து', 'எஸ்.ராமகிருஷ்ணன்', 'நீரில் மிதக்கும் நினைவுகள்' போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன்.

4 years ago

திரைகடலுக்கு அப்பால் 2: அசடன்

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.

4 years ago

திரைகடலுக்கு அப்பால் 1: குற்றமும் தண்டனையும் – தகர்க்க முடியாத தடைகள்

ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.

4 years ago

கவிதையின் மதம்: ஒரு வாசிப்பனுபவம்

உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது.

5 years ago

நவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்

பேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்?

6 years ago

அந்தரத்தில் நிற்கும் வீடு

வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை

6 years ago