லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.
சி.சரவணகார்த்திகேயன்
சி.சரவணகார்த்திகேயன் (1984) கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் கற்று, தற்போது பெங்களூரில் மென்பொருள் பணிபுரிகிறார். ஊர் கோவை – ஈரோடு.
2007ல் குங்குமம் இதழில் கவிப்பேரரசு வைரமுத்து ‘ஒருத்தி நினைக்கையிலே…’ என்ற இவர் படைப்பை முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுத்தார். 2009-ல் இவரது முதல் நூலான ‘சந்திரயான்’ தமிழக அரசின் சிறந்த நூல் விருது பெற்றது. 2014-ல் சுகன்யா தேவி கோவை பாரதியார் பல்கலை.யில் செய்த முனைவர் ஆய்வுக்கு ('சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள்') எடுத்த நூல்களில் ‘பரத்தை கூற்று’ம் ஒன்று. 2015-ல் அந்திமழை இதழ் ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’ பட்டியலில் இடம் பெற்றார். 2016-ல் அகம் - பிரதிலிபி நடத்திய ‘ஞயம் பட வரை’ கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். 2017-ல் உயிர்மை வழங்கும் சுஜாதா விருது (இணையம்) பெற்றார். 2018-ல் தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இவரது ‘பெட்டை’ ஆறுதல் பரிசு பெற்றது. 2019ம் ஆண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருது பெற்றவர்.
குங்குமம் இதழில் ‘ச்சீய் பக்கங்கள்’ (2012), ‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ (2015) தொடர்களை எழுதினார். விகடன் தளத்தில் ‘ஹலோ… ப்ளூடிக் நண்பா!’ என்ற தொடர்பத்தியை எழுதினார் (2019). உயிர்மை, விகடன் தடம், ஆனந்த விகடன், குமுதம், தினமணி கதிர், காமதேனு, அம்ருதா, ஆழம், அகநாழிகை, விளம்பரம் (கனடா) இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ‘தமிழ்’ என்ற மின்னிதழ் நடத்துகிறார். அதில் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன் மூவரையும் நீண்ட நேர்காணல் செய்திருக்கிறார். சிங்கப்பூரில் சிறுகதைப் பட்டறை நடத்தி இருக்கிறார் (2019). இவரது ‘மதுமிதா - சில குறிப்புகள்’ கதை குறும்படமானது.
http://www.writercsk.com/
https://www.facebook.com/saravanakarthikeyanc
https://twitter.com/writercsk