எழுத்தாளர் ஜெயமோகனின் விசும்பு தொகுப்பில் இடம்பெற்ற ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதைக்கு ஓவியம் வரையசொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம்.
சந்துரு
மலேசிய இந்திய ஓவியர்களில் பிரபலமானவராகவும் கவிஞராகவும் அறியப்படுகிறவர் ஓவியர் சந்துரு. மலேசிய தமிழ்ப்பத்திரிகைகளில் வடிவமைப்பாளராகவும் பல ஆண்டுகள் செயலாற்றியுள்ளார். இவருடைய முதல் ஓவியக் கண்காட்சி 2009 ஆம் ஆண்டு நடந்தது. அதனைத்தொடர்ந்து நான்கு முறை இவரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்
அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.