அந்நியர்கள்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

தான்தோன்றி

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.