பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

உடுமலை அருகே மேற்குமலைத்தொடர்ச்சி 'வாளவாடி' பூர்வீக ஊர். ஆனால், கோவை அருகிலுள்ள 'ஒற்றைக்கால் மண்டபம்' என்ற ஊரில் பிறந்து வளர்ந்த பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் இப்போது ஓசூரில் வசிக்கிறார். 2000க்குப்பின் எழுதவந்த முக்கியப் புனைகதை எழுத்தாளர். இவரது 'கனவு மிருகம்', 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளின் மூலம் பரிசோதனைக் கதைகள், மீயதார்த்தப் புனைவுகள், அறிவியல் புனைகதைகள் என வேறுபட்ட கதைக்களங்களை ஆர்த்தவர். கல்குதிரையில் கனவுமிருகம், தந்திகள், வலை, பிரமிடுகளை அளந்த தவளை, பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும் ஆகிய சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. 'புனைவு ஓர் அறிவு வித வினைபுரிவாக: மனிதவாத மையம் விலகிய சாத்தியங்கள்' என்ற விரிவான கட்டுரை இவரின் இருதொகுதிகளையும் முன்வைத்து பிரவீண் பஃறுளியால் எழுதப்பட்டு கல்குதிரை 30 ஆம் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலுக்கு 'எளியோர் இட்ட அமுதம் - அஞ்ஞாடி' என்ற வியாக்கியான வாச்சியம் எழுதியும் இருக்கிறார். தற்போது வங்கியின் கிளை மேலாளராக ஓசூரில் பணிபுரிகிறார்.

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு இலக்கியத்தில் இடமில்லாதபோது அறிவியல் புனைவு கைகளை…

1 year ago

நீச்சல் குளம்: பகுதி 3

காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே…

2 years ago

நீச்சல் குளம்

அழிந்துவிட்ட அனைத்துமே இன்று உயிரோடிருந்தால், அது உன்னைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கலாம். ஆனால் நீ அவைகளை அழிக்கும் குற்றவாளியாக இருப்பாய்.

3 years ago

கோணங்கியின் புனைவுக் கலை

எதார்த்தக் கதைகள் மொழியைக் கதையின் இரண்டாம் பரப்பில் கையாள, கோணங்கி மொழியைப் பிரதானமாகவும் கதையை அதன் உள்பரப்பில் மறைந்திருப்பதாகவும் எழுதுகிறார்.

6 years ago