வீடு பெருக்கிக்கொண்டிருந்தவள் மூச்சு வாங்குகிறதென்று மின்விசிறி இயக்கினால்
ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள்.
நகர்வின் அசைவில் சுமை அழுத்தம் குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக வால் பற்றித் தொடரும் களிறுகளாய் அசையத் தொடங்குகின்றன
தன்னை விரித்துக்கொள்ளத் தன்னையே அழித்துக்கொண்டு ஒளிர்கிறது கவிதை மட்டுமே.
இதுவல்ல இதுவுமல்ல இதுவுமல்ல என்று நிராகரித்தல் வழியாகவும், இதுதான் இதுதான் என்று ஏற்பதன் வழியாகவும் நாம் அறிகிறோம்.