ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும்…
நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது…
தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து 'அதுமாத்ரமாதல்' நிகழ்கிறது.
ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.
லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலமற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.
எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது.
இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.