பொது

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 4.0

2 நிமிட வாசிப்பு

இறுதி நாள் நீட்டிப்பு:
பலரும் கேட்டுக்கொண்டதால், அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்குச் சிறுகதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஏற்கனவே கதைகளை அனுப்பியவர்கள் விரும்பினால் அவர்களின் கதைகளை எடிட் செய்து அனுப்பலாம்.

தமிழில் அறிவியல் புனைவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இதுவரை அரூ மூன்று அறிவியல் சிறுகதைப் போட்டிகளை நடத்தியுள்ளது. இப்போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகள் மூன்று தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து அரூவின் நான்காவது அறிவியல் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது.

போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். போட்டிக்கு வரும் கதைகளிலிருந்து குறிப்பிடத்தகுந்த சில கதைகளை அரூ குழு தேர்வு செய்து நடுவருக்கு அனுப்பும். அவற்றிலிருந்து ஒரு பரிசுக்குரிய கதையை அவர் தேர்வு செய்வார். இன்னொரு பரிசுக்குரிய கதையை அரூ குழு தேர்வு செய்யும். அரூவின் மே 2023 இதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். அத்துடன் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும். இக்கதைகள் புத்தக வடிவிலும் வெளியாகும்.

போட்டியின் விதிமுறைகள்

  1. அறிவியல் சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.
  2. வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும்.
  3. எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம். பிழைகள் அதிகம் இருக்கும் கதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
  4. போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையதளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தர வேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்படாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  5. மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  6. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்குபெறலாம். வயது வரம்பும் கிடையாது.
  7. ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம். அதற்கு மேல் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  8. சென்ற ஆண்டுகளில் பரிசு வென்ற எழுத்தாளர்களும் போட்டியில் பங்கு பெறலாம். அவர்களின் சிறுகதைகள் தேர்வாகும்பட்சத்தில், மே மாத அரூ இதழில் பிரசுரிக்கப்படும். அரூ அறிவியல் சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெறும். ஆனால் பரிசுத்தொகை வழங்கப்பட மாட்டாது. இதுவரை பரிசு பெறாதவர்களுக்கே பரிசுத் தொகை கொடுக்கப்படும். இதன் நோக்கம் சிறந்த அறிவியல் சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கும் என்பதுவே.
  9. எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும்போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.
  10. பரிசுக்குரிய கதைகளை அரூ குழுவும் நடுவரும் பரிசீலித்துத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களின் தீர்ப்பே இறுதியாகும்.
  11. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளை அச்சு வடிவிலும் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பிக்கும் உரிமை அரூ இதழுக்கு உண்டு.
  12. கதைகளை 15 மார்ச் 2023 ஆம் தேதிக்குள் aroomagazine@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அரூ அறிவியல் சிறுகதைத் தொகுப்புகள்

கடந்தாண்டு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் மூன்று தொகுப்புகளாக எழுத்து பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

  1. அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
  2. அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
  3. அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

பரிசுகளை வழங்குபவர்கள்

தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளுக்குப் பரிசுகளை வழங்க அரூவின் இரண்டு நண்பர்கள் முன்வந்துள்ளனர். இவர்களுக்கு அரூவின் மனமார்ந்த நன்றி.

மேலும் படிக்க

  1. அரூ அறிவியல் சிறுகதை போட்டி 2019இல் தேர்வான கதைகள்
  2. அரூ அறிவியல் சிறுகதை போட்டி 2020இல் தேர்வான கதைகள்
  3. அரூ அறிவியல் சிறுகதை போட்டி 2021இல் தேர்வான கதைகள்
  4. 2019 போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வை
  5. 2020 போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைப் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பார்வை
  6. 2021 போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைப் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் பார்வை
  7. “அரூ அறிவியல் சிறுகதை 2019” தொகுப்பிற்கு சுனில் கிருஷ்ணன் எழுதிய முன்னுரை
  8. “அரூ அறிவியல் சிறுகதை 2021” தொகுப்பிற்கு சரவணன் விவேகானந்தன் எழுதிய முன்னுரை
  9. உர்சுலா லெ க்வின் எழுதிய ‘தூக்குப்பை புனைவுக் கோட்பாடு’ கட்டுரை
  10. அரூவில் வெளியான அறிவியல் புனைவு சிறுகதைகள்
  11. அறிவியல் புனைவு: எழுத்தாளர் தொகுப்பாளர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் நேர்காணல் – பாகம் 1 | பாகம் 2
  12. அறிவியல் புனைவு: எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல்
  13. எழுத்தாளர் சாரு நிவேதிதா நேர்காணல்

அரூ குழுவினர்

View Comments

  • அருமையான போட்டி.

    வாழ்த்தி வரவேற்கிறோம்

Share
Published by
அரூ குழுவினர்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago