அறிவிலுமேறி அறிதல் – 7: புலன்சேர்க்கைத் தன்மையும் கலையும்

2 நிமிட வாசிப்பு

நரம்பியல் விஞ்ஞானி வி.எஸ்.ராமசந்திரன் தன் Neurology and Passion for Art உரையில் synesthesia பற்றிப் பேசுகிறார். (synesthesia=Union of senses) புலன்களின் சேர்க்கை எனச் சொல்லலாம். இதில் ஒரு வகை grapheme–color synesthesia (எழுத்துரு-நிறப்புலன் சேர்க்கை) என்பதாகும். உதாரணமாக, எண் 5 எனும் எழுத்துரு சிவப்பு நிறத்திலும், எண் 2 எனும் எழுத்துரு பச்சை நிறத்திலும் புலன்களின் சேர்க்கைத் தன்மையுள்ள நபருக்குத் தோன்றும்.

இதில் விசேஷம் என்னவென்றால் எழுத்துருவிற்கான மூளை மையமும், நிறத்திற்கான மூளை மையமும் மனித மூளையின் ஒரே பகுதியில் அருகருகே இருக்கின்றன. இது fusiform gyrus எனும் பகுதியில் உள்ளது. இரு வேறு மூளை மையங்களிடையே அறுபடாத தொடர்பை இது காட்டுகிறது. “Incomplete pruning between neural centres” என்று வி.எஸ்.ராமச்சந்திரன் இதைக் குறிப்பிடுகிறார்.

இரு வேறு மூளை மையங்களின் அறுபடாத தொடர்பால் 5 எனும் எழுத்துரு புலன்சேர்க்கை தன்மையுள்ள நபருக்குச் சிவப்பு நிறமாகத் தெரிகிறது.

இவ்வாறு மற்ற பல மூளை மையங்களிடையே அறுபடாத தொடர்புகள் இருக்கும் சாத்தியம் புலன்சேர்க்கைத் தன்மை உள்ளோரின் மூளையில் உள்ளது. அதுவே அவர்களின் மூளை செயல்படும் வழிகளின் எதிர்பாராத சாத்தியங்களையும் திறந்துவிடுகிறது.

குறிப்பாக, கவிஞர்களில் உருவகங்களின் (metaphor) உருவாக்கம் மற்றும் நிலைபெறுதலில் புலன்சேர்க்கைத் தன்மையின் பங்கு இருக்கலாம் என ஊகிக்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன். தொடர்பற்றது போல் தோன்றும் இரு வேறு விஷயங்களுக்கு இடையே தொடர்புறுத்தும் தன்மை இந்தப் புலன்சேர்க்கைத் தன்மையால் சாத்தியமாகிறது. He quotes:

To gild refined gold, to paint the lily,
To throw a perfume on the violet,
To smooth the ice, or add another hue
Unto the rainbow, or with taper-light
To seek the beauteous eye of heaven to garnish,
Is wasteful and ridiculous excess.

– William Shakespeare

மின்னல்
ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்.

– பிரமிள்

உருவகங்கள் மட்டுமின்றிக் காட்சிக்கலையிலும் புலன்சேர்க்கைத் தன்மையின் தாக்கத்தை நாம் ஊகிக்கலாம்.


புகைப்படம்: ஶ்ரீநாத்

மேலும் படிக்க

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்