படமொழி – 4: நீண்ட கூந்தல், புத்தி மட்டு

< 1 நிமிட வாசிப்பு

இப்படம் ”நீண்ட கூந்தல், புத்தி மட்டு” என்கிற பழமொழிக்கானது. செக் மொழியில் “dlouhé vlasy, krátký rozum”.

இப்பழமொழி சமீபகாலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இதை என் பால்யத்திலிருந்து நினைவு கூறுகிறேன். ஏதேனும் ஒரு பிரச்சனையின் நியாயத்தன்மை குறித்து நான் வாக்குவாதம் புரியும் போதெல்லாம் என் வாயை அடைப்பதற்கு என் தாத்தாவும் மாமாவும் (இது ஒன்றைத் தவிர மற்றபடி இருவருமே நான் நேசிக்கும் மற்றும் வியக்கும் ஆண்கள்) இதைப் பயன்படுத்துவார்கள். “நீண்ட கூந்தல், புத்தி மட்டு. அதான் உனக்கு புரியல!” எனச்சொல்வார்கள். நான் பெண்ணாக இருப்பதால் பிரச்சனையைப் புரிந்துகொள்ள முடியாது என்பது அதன் பொருள். அந்நிகழ்வுகள் என்னைப் பெரிதும் காயப்படுத்தும். மற்றுமொரு நீதியற்ற பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும். பின்னோக்கிப் பார்க்கும்போது, கேள்விகளால் நச்சரிக்கும் சிறு குழந்தையிடமிருந்து தப்பிக்க அவர்கள்தான் அதீத அறிவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நினைவுகளை என் கணவரிடம் பகிர்ந்து கொண்டபோது ‘இப்பழமொழி பெண்களைச் சுட்டுகிறது என ஒருபோதும் கருதியதில்லை’ என்றார். அவர் சிறுவயதில் தலைமுடியை நீளமாக வளர்க்கும் போதெல்லாம் அவருடைய தாத்தா இதே சொற்களைச் சொல்லி அம்முயற்சியைத் தடுக்க முயல்வாராம். மூளையின் செயல்திறனுக்கும் மயிரின் நீளத்திற்குமான தொடர்பை யாராவது கண்டறிய முடியுமாவென வெறும் வியப்பு மட்டுமே அவருக்குத் தோன்றியிருக்கிறது.


உனாகாவின் ‘படமொழி’ ஓவியத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்