காலம்

< 1 நிமிட வாசிப்பு

‘காலம்’ என்ற கருப்பொருளில் ஓர் அரூப ஓவியமாகத் தீட்டலாம் என்று தோன்றினாலும் தூரிகைகளைக் கையில் எடுத்து மாதங்களாகி இருந்த நிலையில், பார்ப்போம் என்று விட்டேன். அத்தோடு, செய்துகொண்டிருக்கும் பெரிய நாவல் வேலையில் அதனை முற்றிலும் மறந்தும் போனேன். நத்தார் தினத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் மீண்டும் நடைப்பயிற்சியின்போது நினைவுக்கு வந்தது. காலம், நேரம் போன்றவற்றைத் தீட்டுவதென்றால், எப்படி என யோசித்தவாறே நடக்கையில், கணக்கே இல்லாத, ஒழுங்கான, ஒழுங்கே இல்லாத, சீரானது போன்ற, சீர் என்ற ஏதுமற்ற, முன்னுரைக்க முடியாத, முன்னுரைக்க முடிந்த நேர்கோட்டு, வளைந்துநெளிந்த எண்ணற்ற பாதைகளாக ‘காலம்’ என் மனத்திரையில் விரிந்ததை உணர்ந்தேன். எதுவும் தெளிவில்லாத கலவையானதோர் அரூப உணர்வுதான். என்னதான் வருகிறதென்று பார்ப்போம் என்று பென்சில் தீட்டல் போன்ற முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நேரடியாகத் தூரிகைகளை எடுத்தேன். மனத்தில் தோன்றியதைத் தோன்றிய விதத்தில் மூன்று தினங்களில் மூன்று கட்டங்களாக, சின்ன சின்ன உத்திகளைச் செயல்படுத்தி படிப்படியாக முன்னெடுத்தேன்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்